கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனில் முறைகேடு:  சிபிசிஐடி விசாரணையை நடத்த சிபிஐ (எம்) வலியுறுத்தல்

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை குறித்து  சிபிசிஐடி விசாரணையை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 40 கிராம் அளவுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கு ஈடாக பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். இது தொடர்பாக நிலுவை விபரங்களை ஆய்வுக்குட்படுத்திய போது ஏராளமான தவறுகளும், முறைகேடுகளும் நடந்துள்ளது தெரியவந்தது.

ஒரே நபர் 50க்கும் மேற்பட்ட கடன்களின் மூலம் 1 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளதும், போலி நகைகளின் மீதும், நகைகள் இல்லாமலேயே கடன் வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்டுள்ள நகைக்கடன் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நகைக் கடன் வழங்கப்பட்டுள்ளதிலும் மெகா முறைகேடு நடந்துள்ளது பேரதிர்வை அளிக்கிறது. கடந்த அஇஅதிமுக ஆட்சியில் நடைபெற்ற இத்தகைய முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி இம்முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com