புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அருப்புக்கோட்டையில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கக்கூட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வருடாந்திர பேரவைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை வெள்ளைக்கோட்டையிலுள்ள இந்தி பிரேமி மண்டல் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.

News image

பஞ்சாபில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு

Updated On :28 செப்டம்பர் 2021, 3:51 pm

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வருடாந்திர பேரவைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை வெள்ளைக்கோட்டையிலுள்ள இந்தி பிரேமி மண்டல் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை கிளை அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் சுந்தரமூர்த்தி இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். செயலாளர்  உலகநாதன் வரவேற்றார்.உபதலைவர் போத்திராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.மாவட்ட துணைத்தலைவர் கல்யாணி தொடக்கவுரையாற்றினார்.

பொருளாளர் காமராஜ் நிதிநிலை அறிக்கை வாசித்தார். இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன்,அருப்புக்கோட்டை கிளைத்தலைவர் சுந்தரமூர்த்தி,மாவட்டத் தலைவர் குருசாமி,துணைத்தலைவர் திருவண்ணாமலை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அப்போது சங்கத்தின் நிறை,குறைகள்குறித்து விவாதிக்கப்பட்டது. உடன் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும், முன்னாள் நிர்வாகிகள் பலரும் நேரில் கலந்து கொண்டனர். பொருளாளர் செல்லையா நன்றியுரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.