இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆத்தூரில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

ஜெயலலிதாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

News image

ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ஆத்தூரில் ஜெயலலிதா திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய நிர்வாகிகள்.

Updated On :5 டிசம்பர் 2021, 8:11 am

சேலம் மாவட்டம் ஆத்தூரில் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் ஜெயலலிதாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். நகர செயலாளர் அ.மோகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதனையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.நகர கழக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். 

நிகழ்ச்சியில் மாவட்டதுணை செயலாளர் ஏ.டி.அர்ச்சுணன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் அ.சகாதேவன்,டி.எம்.ராமலிங்கம் சங்கீதாமுருகேசன் ஜி.முரளிசாமி வி.முஸ்தபா என்.வீராச்சாமி உமையாள்புரம் கூட்டுறவு வங்கித்தலைவர் வாசுதேவன் செல்லக்கண்ணு திருமண் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.