நாட்டில் புதிதாக 6,650 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 24th December 2021 09:45 AM | Last Updated : 24th December 2021 09:45 AM | அ+அ அ- |

நாட்டில் புதிதாக 6,650 பேருக்கு கரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6650 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6650 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | காட்பாடி பொன்னையாற்று ரயில்வே பாலத்தில் விரிசல்: 23 ரயில்கள் ரத்து
இன்று காலை 9 மணி நிலவரப்படி 7051 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 374 பேர் பலியாகியுள்ள நிலையில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,79,133ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 3,42,15,997 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 77516 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.