காட்பாடி பொன்னையாற்று ரயில்வே பாலத்தில் விரிசல்: 23 ரயில்கள் ரத்து
By DIN | Published On : 24th December 2021 09:37 AM | Last Updated : 24th December 2021 09:37 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
வேலூர் காட்பாடி அருகே பொன்னையாற்றின் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட காரணத்தால் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னையாற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் விரிசல் உள்ளதை நேற்று ரயில்வே துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையும் படிக்க | ஒமைக்ரான் தொற்று: புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பொன்னையாற்று பாலத்தில் ரயில்களை இயக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
ரயில்கள் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள ரயில்வே துறை பயணிகளின் ரயில் கட்டணங்கள் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | தந்தை பெரியார் நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மேலும் விரிசல் ஏற்பட்டுள்ள பாலத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.