ஒமைக்ரான் தொற்று: புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை
By DIN | Published On : 24th December 2021 09:18 AM | Last Updated : 24th December 2021 09:50 AM | அ+அ அ- |

முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட முன்னெச்சரிககை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் 358 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | தந்தை பெரியார் நினைவு தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
இந்நிலையில் ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துவது மற்றும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மூவர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.