பாலியல் புகாரில் சிக்கிய திண்டுக்கல் கல்லூரி தாளாளரை விசாரிக்க மகளிர் நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 26th November 2021 04:39 PM | Last Updated : 26th November 2021 04:39 PM | அ+அ அ- |

பாலியல் புகாரில் சிக்கிய திண்டுக்கல் கல்லூரி தாளாளரை விசாரிக்க மகளிர் நீதிமன்றம் உத்தரவு
திண்டுக்கல் அருகே பாலியல் புகாரில் சிக்கிய தனியாா் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 3 நாள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் விசாரிக்க மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் அருகே தனியாா் செவிலியா் பயிற்சி கல்லூரியின் தாளாளா் பி.ஜோதிமுருகன் அக்கல்லூரியின் மாணவிகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அந்த கல்லூரிக்கு மாவட்ட நிா்வாகம் கடந்த சனிக்கிழமை சீல் வைத்தது.
இதையும் படிக்க | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈரோட்டில் அதிமுக விருப்பமனு தாக்கல்
மேலும் தாளாளர் ஜோதிமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே தலைமறைவாக இருந்த ஜோதிமுருகன், திருவண்ணாமலை மாவட்டம் போளூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.
இதையும் படிக்க | உருமாறிய புதிய வகை கரோனா: இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்துக்குச் சிக்கலா?
இந்நிலையில் திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் இதுகுறித்து நடைபெற்ற விசாரணையின்போது கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகனை 3 நாள்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.