100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈரோட்டில் அதிமுக விருப்பமனு தாக்கல்

ஈரோட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

Published On :


ஈரோடு: ஈரோட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் இன்று தொடங்கி வருகிற 29 ம் தேதி வரை அந்தந்த மாவட்டக் கழக அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து தாக்கல் செய்யலாம் என அதிமுக தலைமை அறிவித்தது.

அதனடிப்படையில் ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தென்னரசு முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான  விருப்ப மனுக்களுக்கான  தொகைகளை செலுத்தி மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை மேயர்  கே.சி.பழனிசாமி,  பகுதி செயலாளர்கள் இரா.மனோகரன், கேசவமூர்த்தி, ஜெகதீஸ் உள்பட பல நிர்வாகிகள் கலந்துகொண்டு மனுக்களை வாங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.