உருமாறிய புதிய வகை கரோனா: இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்துக்குச் சிக்கலா?

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பது இந்திய அணியின்....
உருமாறிய புதிய வகை கரோனா: இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்துக்குச் சிக்கலா?

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பது இந்திய அணியின் தெ.ஆ. சுற்றுப்பயணத்துக்குச் சிக்கலை வரவழைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கரோனா தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா வியாழக்கிழமை தெரிவித்தாா். ஏற்கெனவே பி.1.1.529 என வகைப்படுத்தப்பட்ட புதிய வகை உருமாறிய கரோனா தீநுண்மி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதாக தேசிய தொற்றுநோய் நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவிலும் விமான நிலையங்களில் எச்சரிக்கையை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.

தென்னாப்பிரிக்காவில் கரோனா 4-ஆம் அலை வரும் டிசம்பா் அல்லது ஜனவரியில் தாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த புதிய வகை கரோனா நோய்த்தொற்று பரவலை அதிகரித்து வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் வரை சராசரியாக 100 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி வந்த நிலையில், புதன்கிழமை 1,200 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அந்நாட்டில் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கரோனா பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனா். ஆப்பிரிக்க கண்டத்திலேயே அதிகபட்சமாக இங்கு 9 ஆயிரம் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள். 

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பது இந்திய அணியின் தெ.ஆ. சுற்றுப்பயணத்துக்குச் சிக்கலை வரவழைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டிசம்பர் 17-ல் தொடங்கி ஜனவரி 26 வரை நடைபெறுகிறது. தற்போது இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது. தற்போது, முதல் அதிகாரபூர்வம்ற்ற டெஸ்ட் நடைபெற்று வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் நெதர்லாந்து அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இன்று, முதல் ஒருநாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதர இரு ஆட்டங்களும் நடைபெறுவது பற்றி இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து பேசி ஒரு முடிவெடுக்கவுள்ளன. 

இங்கிலாந்தில் கரோனா பயம் காரணமாக இந்திய அணி 5-வது டெஸ்டில் பங்கேற்க மறுத்தது. இந்நிலையில் டிசம்பர் 8 அன்று திட்டமிட்டபடி இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குக் கிளம்புமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. கடந்த வருடம் தென்னாப்பிரிக்க அணியில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் விளையாடாமல் நாடு திரும்பியது. ஆஸ்திரேலிய அணியும் தென்னாப்பிரிக்காவில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க மறுத்தது. இந்தச் சூழலில் உருமாறிய புதிய வகை கரோனா தொற்று காரணமாக திட்டமிட்டபடி தெ.ஆ. - இந்தியா தொடர்கள் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com