ஜிம்பாப்வேவுக்கு எதிராக அரைசதம் விளாசியதன் மூலம் தன்னை விமர்சித்தவர்களை அபிஷேக் சர்மா அமைதியாக்கியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நேற்று (பிப்ரவரி 26) நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை டக் அவுட்டான அபிஷேக் சர்மா, நேற்றையப் போட்டியில் அரைசதம் விளாசி ஃபார்முக்குத் திரும்பினார்.

சுனில் கவாஸ்கர்
இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிராக அரைசதம் விளாசியதன் மூலம் தன்னை விமர்சித்தவர்களை அபிஷேக் சர்மா அமைதியாக்கியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு பேட்டராக அபிஷேக் சர்மா எப்படி விளையாடக் கூடியவர் என நமக்குத் தெரியும். ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம், அவரது ஆட்டத்தின் மீது சந்தேகப்பட்டவர்களை அபிஷேக் சர்மா அமைதியாக்கியுள்ளார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக ரன்கள் குவிக்க அபிஷேக் சர்மா சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். ஆஃப் ஸ்பின்னர்கள் வீசிய சிறப்பான பந்துகளை அவர் மதித்து விளையாடினார். அவர் தேவையின்றி எந்தவொரு ரிஸ்க்கான ஷாட்டுகளையும் முயற்சிக்காமல் அமைதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் அவர் தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தினார். அதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், இதுபோன்ற அபிஷேக் சர்மாவை நாம் வழக்கமாக பார்த்திருக்க மாட்டோம்.
அபிஷேக் சர்மா நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டு வருகிறார் என நினைக்கிறேன். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இது போன்று தொடர்ச்சியாக ரன்கள் குவிக்க முடியாத சுழல் உருவாகும். ஆனால், அதிலிருந்து நாம் எவ்வளவு கற்றுக் கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம். அபிஷேக் சர்மா நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக நான் உணர்கிறேன். இனிவரும் போட்டிகளில் அவர் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடுவார் என்றார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
The former captain of the Indian team has said that Abhishek Sharma has silenced his critics by scoring a half-century against Zimbabwe.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மற்றவர்கள் நினைப்பது முக்கியமல்ல, அதிரடியாக விளையாடுங்கள்; அபிஷேக் சர்மாவுக்கு கம்பீர் ஆதரவு!

அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம்; பவர்பிளேவில் இந்தியா அசத்தல்!

ரன்கள் குவிப்பதில் தடுமாற்றம்; இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா?

ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா; அரைசதம் விளாசி அசத்தல்!
வீடியோக்கள்

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை


