சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா; அரைசதம் விளாசி அசத்தல்!

சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசி அபிஷேக் சர்மா மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளார்.

News image
அபிஷேக் சர்மா- படம் | AP
Updated On :26 பிப்ரவரி 2026, 2:38 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசி அபிஷேக் சர்மா மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்று வரும் சூப்பர் சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.

ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா!

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, அவர் விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று நடைபெற்று வரும் வாழ்வா? சாவா? ஆட்டத்தில் அரைசதம் விளாசி அபிஷேக் சர்மா மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்பியுள்ளார்.

YouTube video thumbnail

அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 26 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.