டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மா அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அகமதாபாதில் இன்று (மார்ச் 8) நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது.
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் அதிரடி!
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இவர்கள் இருவரும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் விளாசி திணறடித்தனர்.
அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 18 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் அதிவேக அரைசதம் இதுவாகும்.
அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Abhishek Sharma impressed with a stunning half-century in the final match against New Zealand in the T20 World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரன்கள் குவிப்பதில் தடுமாற்றம்; இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா?

அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா? ரவி சாஸ்திரி கூறுவதென்ன?

விமர்சித்தவர்களை அமைதியாக்கிய அபிஷேக் சர்மா; முன்னாள் கேப்டன் பாராட்டு!

ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா; அரைசதம் விளாசி அசத்தல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


