நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 180.19 கோடியைக் கடந்தது
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,61,318 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,61,318 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, மொத்தம் 1,80,19,45,779கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் புதிதாக 2,503 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,29,93,494 ஆக உள்ளது. இது கடந்த 680 நாள்களில் மிகக் குறைவான தொற்று பாதிப்பாகும்.
கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,15,877-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20 சதவிகிதமாக உள்ளது.
நேற்று ஒரேநாளில் 4,377 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,24,41,449 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.72 சதவிகிதமாக உள்ளது.
கடந்த 675 நாள்களில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 36,168 ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.83 சதவிகிதமாக உள்ளது.
இன்று காலை 7 மணி நிலவரப்படி, 2,10,99,040 தடுப்பூசி மையங்கள் மூலம் இதுவரை 1,80,19,45,779 (180.19 கோடி) கரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 5,32,232 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை 77,90,52,383 (77.90 கோடி) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
வயதுவாரி விவரங்கள்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...