விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 2 மடங்காக உயர்வு!
By DIN | Published On : 06th August 2022 10:59 AM | Last Updated : 06th August 2022 10:59 AM | அ+அ அ- |

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், ஓய்வூதியத்தை உயர்த்து வழங்குவதற்கான பரிந்துரையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அரசுக்கு அனுப்பி வைத்தார்.
இதையும் படிக்க | வெறுப்பைத் தூண்டும் 130 சமூக ஊடக செய்திகள் பதிவு
இந்நிலையில், ஆணையத்தின் உறுப்பினர் செயலாளரின் பரிந்துரையை பரீசிலித்த தமிழக அரசு, விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை ரூ.3000 இல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
விளையாட்டு வீரர்களின் சாதனைகள் அங்கீகரித்து அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது.