வகைப்படுத்தப்படாத புதிய வகை கரோனா!

பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனாவை உலக சுகாதார அமைப்பு இன்னமும் வகைப்படுத்தவில்லை.
வகைப்படுத்தப்படாத புதிய வகை கரோனா!
வகைப்படுத்தப்படாத புதிய வகை கரோனா!

பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனாவை உலக சுகாதார அமைப்பு இன்னமும் வகைப்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸை தவிர வேறு எந்த நாட்டிலும் ஐஹெச்யு வகை கரோனா இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்குச் சென்றுவிட்டு பிரான்ஸ் திரும்பிய 12 பேரிடம்தான் அந்த வகை கரோனா கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, ஐஹெச்யு கரோனா பற்றிய ஆய்வு விவரங்களை உலக சுகாதார அமைப்பு ஆராய்ந்து, அதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டால்தான் அந்த வகை கரோனாவின் இயல்புகள் அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து கரோனா வகைகளைவிட ஐஹெச்யு வகை கரோனா அதிக பரவும் தன்மை கொண்டதாகவும் தடுப்பூசிகள் மற்றும் ஏற்கெனவே நோய்த்தொற்று ஏற்பட்டதால் உருவாகியுள்ள நோய்த் தடுப்பாற்றலை மீறுவதாகவும் இருந்தாலும், அதன் முழுமையான தன்மை குறித்து இப்போதே முடிவு செய்வது தவறு. இதுகுறித்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொண்டு, அது மனிதா்களிடையே எவ்வாறு பரவுகிறது என்பதை நன்கு தெரிந்துகொண்ட பிறகுதான் இதுகுறித்து ஒரு முடிவுக்கு வர முடியும் என்று விஞஞானிகள் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணா் எரிக் ஃபீல்டிங் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘எந்த ஒரு தீநுண்மியும் தொடக்கத்திலிருந்த தனது உருவத்தை காலப்போக்கில் மாற்றிக் கொண்டுதான் இருக்கும். இதன் காரணமாக தீநுண்மிகளின் பரவும் வேகம் அதிகரித்தாலும் அது அதிக ஆபத்தானவையாக மாறும் என்று கூறிவிட முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com