சென்னையில் 2வது விமான நிலையம்: 2 இடங்கள் இறுதி
By DIN | Published On : 30th March 2022 07:16 PM | Last Updated : 31st March 2022 10:45 AM | அ+அ அ- |

ஜோதிராதித்ய சிந்தியா
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் இரண்டு இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
போபால் - சென்னை இடையேயான நேரடி விமான சேவையை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் தொடக்கிவைத்தனர்.
பின்னர் பேசிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இரண்டாவது விமான நிலையம் தேவை என்பதை கருத்தில் கொண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
படிக்க | கார் திருடப்பட்டதை குறுந்தகவல் மூலம் அறிந்து கொண்ட பெண்
தில்லிக்கு ரூ.38,000 கோடி செலவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மும்பையில் இரண்டாவது விமான நிலையம் நவி மும்பையில் ரூ.17,000 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
சென்னைக்கும் இரண்டாவது விமான நிலையத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதற்காக மாநில அரசு சார்பில் நான்கு இடங்கள் பரிந்துரை செயப்பட்டுள்ளன. இதில் இரண்டு இடங்களைத் தேர்ந்தெடுத்து மாநில அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.