ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆக. 20-ல் கன்டோன்மென்ட் பல்லாவரம் ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்!

கன்டோன்மென்ட் பல்லாவரம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்...

News image
Updated On :16 ஆகஸ்ட் 2023, 10:15 am

DIN

சென்னை கன்டோன்மென்ட் பல்லாவரம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வரும் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

மாரியம்மன் கோவில் வீதியிலுள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் ஆலயத்தின் நூதன ராஜகோபுர ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிறு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை கிராம நாட்டாண்மை, ஆலய நிர்வாகிகள், கட்டத் திருப்பணிக் குழுவினர் மற்றும் கும்பாபிஷேக விழாக் குழுவினர் செய்துவருகின்றனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்குத் தொடங்கி நடைபெறுகின்றன. சனிக்கிழமை இரண்டாம் நாள் பூஜைகளைத் தொடர்ந்து, மூன்றாம் நாள் ஞாயிறு காலை 6 மணிக்குத் தொடங்கி கோ பூஜை, விக்னேஸ்வர பூஜையுடன் ஆகுதிகளும் நடைபெறுகின்றன.

காலை 9 மணிக்கு யாத்ராதானமும் மகா பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் கும்பம் புறப்பாடு நடைபெறும்; 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நூதன ராஜகோபுர விமான கலசம் மற்றும் சர்வசக்தி ஸ்ரீ தண்டுமாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தொடர்ந்து மகா அபிஷேகமும் மாலையில் அம்மன் திருவீதிவுலாவும் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.