கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நீர், உணவு, மின்சாரம் எதையும் அனுமதிக்கமுடியாது - இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்

நாங்கள் விலங்குகளுடன் சண்டையிடுகிறோம். அதற்கேற்ப தான் நடந்து கொள்ள இயலும் என தனது தரப்பை முன்வைத்து செய்தி வெளியிட்டுள்ளார் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்.

News image
Updated On :9 அக்டோபர் 2023, 12:31 pm

DIN

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ் காலண்ட் தாக்குதலுக்கு உள்ளான காஸாவை முழுமையாக முற்றகையிட இன்று உத்தரவிட்டுள்ளார். 

 "நாங்கள் முழுமையாக காஸாவை முற்றகையிட்டுள்ளோம். மின்சாரம், உணவு, நீர், எரிவாயு எதுவும் அனுமதிக்க போவதில்லை. எல்லாம் முடக்கப்பட்டுள்ளது" என தனது விடியோ செய்தியில் குறிப்பிட்டு உள்ளார். இந்தப் பகுதி ஏறத்தாழ 23 லட்சம் மக்களைக் கொண்டது.

கடந்த சனிக்கிழமை தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் தனது எதிர் தாக்குதலை தொடங்குவதற்கு முன்பு நகர்ப்பகுதிகளில் மக்களை சுட்டுக் கொன்றனர்.

இஸ்ரேல் நாட்டுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்த நிலையில் இரு தரப்பிலும் நடத்தப்பட்ட  தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

"நாங்கள் விலங்குகளுடன் சண்டையிடுகிறோம். அதற்கேற்ப தான் நடந்து கொள்ள இயலும்" என தனது தரப்பை முன்வைத்து செய்தி வெளியிட்டுள்ளார் இஸ்ரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர்.

இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது நடத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட 493 பேர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.