கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கொடியேற்றம்: 13ல் தேரோட்டம்

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் பங்குனித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கொடியேற்றம்: 13ல் தேரோட்டம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் பங்குனித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவணந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள், பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 5.30 மணிக்கு மேல் கொடிப்பட்டம், மாட வீதி, ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதையடுத்து கொடிப்பட்டத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து சுமார் காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கொடியேற்றப்பட்டது.

இதையடுத்து நந்தி, பலிபீடம் மற்றும் கொடிமரம் ஆகியவற்றிற்கு 18 வகையான அபிஷேக பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கொடியேற்றம்: 13ல் தேரோட்டம்
தொலையுணர்வு செயற்கைக் கோள் ஆய்வு மையத்தில் வேலை: முதுகலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கா. கருணாநிதி,கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் சண்முகராஜ், திருப்பதிராஜா, நிருத்திய லட்சுமி என்ற சுதா, ரவீந்திரன், கம்மவார் சங்கத் தலைவர் ஹரி பாலகன், துணைத் தலைவர் பட்டுராஜன், வணிக வைத்திய சங்கத் தலைவர் வெங்கடேசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜகோபால், நகராட்சி ஆணையர் கமலா, கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகளைப்பிரியா, நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ரத்தினவேல் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாலை 4 மணிக்கு திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப்பணி விடை ஸ்ரீ பலிநாதர் அஸ்திரதேவர் திருவீதியுலாவும், இரவு 7 மணிக்கு மண்டகப்படிதாரர் பிராமணாள் சமூகத்தினர் சார்பில் பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கொடியேற்றம்: 13ல் தேரோட்டம்
இடம்பெயர்ந்ததா சிறுத்தை..? 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இந்த மாதம் 13 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு கம்மவார் சங்கம் சார்பில் நடைபெறுகிறது.

14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி தீபாராதனை, யானை மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது. 15 ஆம் தேதி கோவில்பட்டி நாடார் உறவின் முறைச் சங்கம் சார்பில் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

விழா நாள்களில் நாள்தோறும் காலை மற்றும் இரவில் சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், கோயில் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் (பொ) செல்வி, செயல் அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com