தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ பட டீசர்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதிய படமான ‘குரங்கு பெடல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2024, 12:40 pm

DIN

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வெளியான அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இவர் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அமரன் எனப் பெயரிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் புரோடக்‌ஷன் என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.

இந்நிறுவனத்தின் மூலம் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் குரங்கு பெடல் என்ற புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை கமலகண்ணன் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

குரங்கு பெடல் படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.