ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

ரிஷப் பந்த் சிறப்பாக செயல்படுவது அவருக்கும், இந்திய அணிக்கும் ஊக்கமளிக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்படம் | ஐபிஎல்

ரிஷப் பந்த் சிறப்பாக செயல்படுவது அவருக்கும், இந்திய அணிக்கும் ஊக்கமளிக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று அகமதாபாதில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ஃபீல்டிங் மற்றும் பேட்டிங்கில் ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட்டார். நேற்றைப் போட்டியில் 2 கேட்ச்சுகள் மற்றும் 2 ஸ்டம்பிங் செய்த அவர், பேட்டிங்கில் 16 ரன்கள் எடுத்து அசத்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

ரிஷப் பந்த்
சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

இந்த நிலையில், ரிஷப் பந்த் சிறப்பாக செயல்படுவது அவருக்கும், இந்திய அணிக்கும் ஊக்கமளிக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

கெவின் பீட்டர்சன்
கெவின் பீட்டர்சன் படம் | கெவின் பீட்டர்சன் (எக்ஸ்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த் ஃபீல்டிங்கில் வேகமாக நகர்வது, திறம்பட பந்துகளை கேட்ச் செய்வது அவருக்கும், இந்திய அணி நிர்வாகத்துக்கும் ஊக்கமளிக்கும். காயத்திலிருந்து மீண்டு வருபவர்களைப் போல ரிஷப் பந்த்துக்கும் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த சிறிது காலம் தேவைப்படும். அவர் பயங்கரமான கார் விபத்தில் சிக்கி கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதனால் அவருக்கு சிறிது காலம் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

படம் | ஐபிஎல்

உலகக் கோப்பைக்குத் தயாராக அவர் 14 - 15 ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டும். அவர் எந்த அளவுக்கு அதிகம் கிரிக்கெட் விளையாடுகிறாரோ அந்த அளவுக்கு டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக இருப்பார் என்றார்.

ரிஷப் பந்த்
ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சிறப்பாக கீப்பிங் செய்ததன் அடிப்படையில் நேற்றையப் போட்டியில் முதல் முறையாக ரிஷப் பந்த்துக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சிறப்பான கீப்பிங் திறமையை வெளிப்படுத்தியமைக்காக தினேஷ் கார்த்திக்குக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com