சூர்யாவுக்கு மீண்டும் ஜோடியாகும் ஜோதிகா


சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடி சேரவுள்ளனர்.
நிஜத்தில் தம்பதியான இந்த ஜோடி ஏற்கெனவே பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்கா, மாயாவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக இருவரும் இணைந்து சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்திருந்தனர்.
அதன் பிறகு இருவரும் தனித்தனியாக நடித்து வருகின்றனர். இதனால் இந்த ஜோடி மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு அமையவில்லை. இந்த நிலையில் சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை பெங்களூரு டேஸ் பட இயக்குநர் அஞ்சலி மேனன் அல்லது சில்லுக்கருப்பட்டி பட இயக்குநர் ஹலிதா ஹமிம் ஆகிய இருவரில் ஒருவர் இயக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே சூர்யா நடிப்பில் அடுத்ததாக கங்குவா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...