பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

புதிய தொடரில் மீண்டும் இணையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பெரிதும் பாராட்டப்பட்ட நிரோஷா - ஸ்டாலின் ஜோடி மீண்டும் புதிய தொடரில் இணையவுள்ளது குறித்து...

நிரோஷா - ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பெரிதும் பாராட்டப்பட்ட நிரோஷா - ஸ்டாலின் ஜோடி மீண்டும் புதிய தொடரில் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்தப் புதிய தொடரும் விஜய் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் ஸ்டாலினுக்கு ஜோடியாக நிரோஷா நடித்து வருகிறார்.

முதல் பாகத்தில் ஸ்டாலினுக்கு ஜோடியாக சுஜிதா நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் நிரோஷா சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.

திரைப்படங்களில் நடித்துள்ள அனுபவத்தின் காரணமாக தனக்குக் கொடுக்கப்பட்ட அம்மா பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை நிரோஷா வழங்கி வருகிறார்.

தனது வசீகரமான தோற்றத்தாலும் தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிரோஷா, சிறந்த அம்மா பிரிவில் சின்ன திரை விருதும் வென்றுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 500வது நாள் கொண்டாட்டம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 500வது நாள் கொண்டாட்டம் - படம் - எக்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வைதேகி காத்திருந்தாள் தொடருக்குப் பிறகு வலுவான பாத்திரத்தில் நிரோஷா நடித்து வருகிறார்.

பச்சைக்கிளி, ஆண்டாள் அழகர் உள்ளிட்டத் தொடர்களில் மண்மணம் மாறாத கிராமத்து பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற ஸ்டாலின், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

தற்போது நிரோஷாவும் ஸ்டாலினும் புதிய தொடரில் மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ளனர். இந்தத் தொடரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. பிரைம் நேரமல்லாத, பிற்பகல் நேரத்தில் இத்தொடர் ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Pandian Stores Nirosha Stalin again pair for new serial

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.