கண்ணூர் தொகுதியில் தனது வாக்கை செலுத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன்.
கண்ணூர் தொகுதியில் தனது வாக்கை செலுத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன்.

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளன.

திருவனந்தபுரம்: கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 9 மணி நிலவரப்படி 11.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளன.

மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் (39), புதுச்சேரி (1) உள்பட 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கா்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ராஜஸ்தானில் 13, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசத்தில் தலா 8, மத்திய பிரதேசத்தில் 6, அசாம், பிகாரில் தலா 5, சத்தீஸ்கா், மேற்கு வங்கத்தில் தலா 3, மணிப்பூா், திரிபுரா, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி என 88 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

கண்ணூர் தொகுதியில் தனது வாக்கை செலுத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன்.
அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் கேரளத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் 20 தொகுதிகளில் 194 வேட்பாளர்களின் தலைவிதியை வாக்களிக்கும் வாக்களர்களின் வாக்குகளே தீர்மானிக்க உள்ளது.

இந்த நிலையில்,கண்ணூர் தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 13.63 சதவீத வாக்குகளுடன் ஆலப்புழா முன்னிலை வகிக்கிறது, திருவனந்தபுரத்தில் 10.37 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் தலைவரும் தற்போதைய எம்பியுமான ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் 12.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஆலத்தூர் - 11.91 சதவீதம், அட்டிங்கல் - 11.83 சதவீதம், சாலக்குடி - 13.13 சதவீதம், எர்ணாகுளம் -11.44 சதவீதம், இடுக்கி -11.85 சதவீதம், கண்ணூர் -12.81 சதவீதம், காசர்கோடு -12.10 சதவீதம், கொல்லம் -10.45 சதவீதம்.

கோட்டயம் - 12.79 சதவீதம், கோழிக்கோடு - 12.22 சதவீதம், மலப்புரம் -11.17 சதவீதம், மாவேலிகரா -12.94 சதவீதம், பாலக்காடு -13.57 சதவீதம், பத்தனம்திட்டா - 11.37 சதவீதம்), பொன்னானி - 10.47 சதவீதம், திருச்சூர் - 12.71 சதவீதம், வடகரா - 10.14 சதவீதம் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளன.

கேரளத்தில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அன்னி ராஜாவை எதிர்த்து மீண்டும் போட்டியிடுகிறார்.

வயநாட்டில் 2009 பொதுத் தேர்தலில் இருந்து காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது. மாநிலத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத பாஜக, மாநிலத் தலைவர் கே.சுரேந்திரனை இந்த தொகுதியில் நிறுத்தியுள்ளது.

கண்ணூர் தொகுதியில் தனது வாக்கை செலுத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன்.
வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

திருவனந்தபுரம்: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் 2009, 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பன்னியன் ரவீந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

திருச்சூர்: காங்கிரஸ் வேட்பாளர் கே.முரளீதரனை எதிர்த்து சிபிஐ சார்பில் வி.எஸ்.சுனில் குமாரும், பாஜக சார்பில் நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியும் போட்டியிடுகின்றனர்.

அட்டிங்கல்: சிபிஎம் சார்பில் வி.ஜாய், பாஜக சார்பில் வி.முரளீதரனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அடூர் பிரகாஷ் போட்டியிடுகிறார்.

மூன்றாம் கட்ட தேர்தல் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. ஏழாம் கட்ட தேர்தல் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com