
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-வது நினைவு நாளையொட்டி முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி ஓமந்தூரார் வாளகத்தில் உள்ள சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(ஆக. 7) ஓமந்தூராா் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகிலிருந்து புறப்பட்ட இப்பேரணி, காமராஜா் சாலையில் உள்ள நினைவிடத்தில் முடிவடைகிறது. கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின்மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் தொகுதிக்கு உள்பட்ட காட்டூரில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை அவரது நினைவு தினத்தையொட்டி சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.