கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புத்ததேவ் பட்டாச்சார்ஜி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி மறைவையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஆகஸ்ட் 2024, 8:33 am

DIN

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி மறைவையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இடதுசாரி இயக்கத்தின் முதுபெருந்தலைவரும், மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

தனது மாநிலத்துக்கும் நாட்டுக்கும் அவர் காட்டிய மாறாத அர்ப்பணிப்பும் சேவையும் என்றும் நினைவுகூரப்படும்.

ஓர் உறுதியான மார்க்சியவாதியாக, சமத்துவச் சமுதாயத்தை வளர்த்தெடுக்கவும் - விளிம்புநிலை மக்களின் நலனுக்காகவும் - சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கவும் தனது வாழ்வை அவர் அர்ப்பணித்துக் கொண்டார்.

அவரது தலைமைத்துவமும், மக்கள் மீதான உறுதிப்பாடும் வருங்காலத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் இந்த வேளையில் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழருக்குச் செவ்வணக்கம்! என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.