
பேராசிரியர்கள் நியமன முறைகேடுகள் குறித்து விசாரிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக கடந்த 2018ல் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க ஒரு அமைக்கப்படும் என்று பல்கலைக்கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் குழு அமைக்க தாமதித்ததால், சையது ரஹமத்துல்லா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து பொதுநல வழக்கு ஒன்றை 2019ல் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதால் உடனடியாக விசாரணை நடத்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இன்றைய விசாரணையில் பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு, விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும் பேராசிரியர் நியமனத்தில் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரத்தில், பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விண்ணப்பதாரர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என சென்னை பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.