சென்னையில் ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

7 நாள்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது (கோப்புப்படம்)
கைது (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

சென்னை பெருநகரில் கடந்த 7 நாள்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கைது (கோப்புப்படம்)
நீலகிரி, கோவையில் 2 நாள்களுக்கு மிக கனமழை பெய்யும்!

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 11.08.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள். திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 133 குற்றவாளிகள். கஞ்சா மற்றும் போதை பொருள்கள் விற்பனை செய்த 183 குற்றவாளிகள், குட்கா புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 29 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 7 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 17 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் படுத்திய 5 குற்றவாளிகள் மற்றும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் 4 குற்றவாளிகள் என மொத்தம் 838 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ. அருண். இ.கா.ப, உத்தரவின்பேரில் கடந்த 05.08.2024 முதல் 11.08.2024 வரையிலான 7 நாள்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com