
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் லாரியில் இருந்து வேதிப்பொருள்களை இறக்கிய போது ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உடல் கருகி சம்ப இடத்திலேயே பலியாகினர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம் பெற்று மல்லி மாயத்தேவன்பட்டியில் ஜெயந்தி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், இந்த பட்டாசு ஆலையை சிவகாசியை சேர்ந்த கண்ணன் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 42 பட்டாசு ஆலையில் 60-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை வழக்கம்போல் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர்.
புதன்கிழமை காலை 10 மணி அளவில் பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருள்களான வேதிப்பொருள்களை வேனில் இருந்து மருந்து பொருள்கள் இருப்பு வைக்கும் அறையில் இறக்கி கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மூலப்பொருள்கள் உராய்வு காரணமாக திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், இரண்டு தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.இதில் வேதிப்பொருள்கள் இருப்பு வைத்திருந்த அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும் வேதிப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனமும் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் பலியானவர்கள் நாகபாளையத்தை சேர்ந்த புள்ளகுட்டி, குன்னூரை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது.
தகவலறிந்து வந்த சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து மல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.