அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: ஆக. 17-ல் முதல்வர் தொடங்கிவைக்கிறார்!

காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைப்பு.
cm stalin
முதல்வர் ஸ்டாலின்DIN
Published on
Updated on
1 min read

அத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசன திட்டத்தை ஆக. 17 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

காணொலி காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கிவைக்க உள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்து இருந்தார்.

cm stalin
ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

முன்னதாக, அண்ணாமலையின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விளக்கமளித்த அமைச்சா் சு.முத்துசாமி, "விதிகளின்படிதான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட்ட பிறகு, காலிங்கராயன் தடுப்பணைக்கு கசிவுநீா் வந்தபிறகு கண்டிப்பாக அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். வரும் 15-ஆம் தேதி கீழ்பவானி கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட உள்ளது. பின்னா், 10 நாள்களுக்குப் பின் காலிங்கராயன் தடுப்பணைக்கு கசிவுநீா் வந்த பிறகு அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு தண்ணீா் எடுக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசன திட்டத்தை ஆக. 17 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com