எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்குவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எந்த சூழலிலும் எந்த காலத்திலும் ஒரு தலித் மாநிலத்தின் முதல்வராக முடியாது. திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது. இதை விவாதித்தால் நாடாளுமன்றத்துடன் இந்த அதிகாரம் இணைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும் என்று முன்னதாக விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலளித்து தெரிவித்ததாவது:
ஒட்டுமொத்த பட்டியலின சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவோம். இது வெறும்பேச்சு அல்ல. எங்களுக்கு முதன் முதலில் மத்திய அமைச்சர் பதவி கிடைத்தவுடன் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவருக்குதான் அந்த பதவியைக் கொடுத்தோம்.
பட்டிலின் மக்களுக்கு அதிகமாக செய்தது பாட்டாளி மக்கள் கட்சிதான். நாங்கள் 1998-ல் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரை மத்திய அமைச்சராக்கினோம். ஆனால் திமுக 1999-ல்தான் ஆ. ராசாவை மத்திய அமைச்சராக்கியது என்று தெரிவித்தார்.