தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பயணித்தின் போது, அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து, பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எத்தனை நாள் பயணம் என்பது குறித்த விரிவான தகவல் முதல்வர் அலுவலகம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 10 நாள்கள் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று வந்தது குறுப்பிடத்தக்கது.