அக்டோபரில் தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம்!

தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அக்டோபரில் தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம்!
படம் | தென்னாப்பிரிக்க லீக் டி20 (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரின் 3-வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் என தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரின் தலைவர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அக்டோபரில் தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம்!
160 ரன்களுக்கு ஆட்டமிழந்த தென்னாப்பிரிக்கா; ஆதிக்கம் செலுத்தும் வேகப் பந்துவீச்சாளர்கள்!

இந்த டி20 லீக் தொடருக்கான வீரர்களை தக்க வைப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டு அந்த பணிகள் நிறைவடைந்தன. அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தில் அணிகள் தங்களுக்கு தேவையான 13 வீரர்களை ஏலமெடுத்துக் கொள்ளலாம்.

தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணியுடன் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இணைவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் விளையாடவுள்ள முதல் இந்திய வீரராக தினேஷ் கார்த்திக் மாறியுள்ளார்.

அக்டோபரில் தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம்!
வினேஷ் போகத் இறந்துவிடுவார் என பயந்தேன்.. பயற்சியாளர் வோலர் அகோஸ்

தினேஷ் கார்த்திக்கை தவிர்த்து, சர்வதேச கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்களான பென் ஸ்டோக்ஸ், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், டிரெண்ட் போல்ட், ஜானி பேர்ஸ்டோ, டெவான் கான்வே, ஸாக் கிராலி, ரஷித் கான் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் இந்த தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் கலந்துகொண்டு விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com