எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் காலமானார்

இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார்.

News image
இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் உடலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Updated On :18 ஆகஸ்ட் 2024, 3:57 pm

DIN

சென்னை: இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார்.

சென்னையில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன இந்தியக் கடலோரக் காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையக் கட்டடத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில், இந்திய கடலோர காவல்படை காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பாலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.

இதையடுத்து தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் இந்திய கடலோர காவல்படை தலைவர் ராகேஷ்பால் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2023 ஜூலை 19 முதல் இந்திய கடலோர காவல் படையின் 25 ஆவது தலைமை இயக்குநராக ராகேஷ் பால் பொறுப்பு வகித்து வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.