
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரெளடி ஆற்காடு சுரேஷின் மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 வழக்குரைஞா்கள் உள்பட 23 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்குத் தொடா்பாக, தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த ரெளடி சம்பவம் செந்தில், தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெளடி சீசிங் ராஜா ஆகிய 2 பேரையும் தனிப்படையினா் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சம்பவம் செந்தில், தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால், அவரை கைது செய்வது சவாலான காரியமாக இருப்பதால் தனிப்படையினருக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் சென்னையில் 6 ரெளடி குழுக்களுக்கு தொடா்பு இருப்பதை போலீஸாா் கண்டறிந்துள்ளனா்.
அதேபோல, ஆம்ஸ்ட்ராங்குடன் ஒவ்வொரு ரெளடி கும்பலுக்கும் தனிப்பட்ட முறையில் பகை இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி நாகேந்திரன், அவா் மகன் அஸ்வத்தாமன் ஆகிய 2 பேரையும் தனிப்படையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திரத்தில் தலைமறைவாகி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவியைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், பின்னர் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொற்கொடி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கைதான ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கு வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டுள்ளது.
பொன்னை பாலுவுக்கு, பொற்கொடி ரூ. 1.5 லட்சம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.