கலைஞர் நினைவு நாணயத்தின் விலை ரூ.10,000: முதல்வர் ஸ்டாலின்

யார் வேண்டுமென்றாலும் 10,000 ரூபாய் கொடுத்து அறிவாலயத்தில் சென்று அதைப் பெற்றுக் கொள்ளலாம் என முதல்வர் அறிவிப்பு.
cm stalin
முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)DIN
Published on
Updated on
1 min read

கலைஞர் கருணாநிதி உருவம் பதித்த ரூ.100 நாணயத்தின் விலை ரூ.10,000 என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி. சங்கரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக பேசினார். அப்போது அவர் ஆற்றிய உரைவில் பேசியதாவது:

நாணயம் அறிவாலயத்திற்கு வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சென்று 100 ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம்.

100 ரூபாய் நாணயம்தான், ஆனால் அதன் மதிப்பு 10,000 ரூபாய். மதிப்பே கிடையாது.

யார் வேண்டுமென்றாலும் 10,000 ரூபாய் கொடுத்து அறிவாலயத்தில் சென்று அதைப் பெற்றுக் கொள்ளலாம். ஏனென்றால், காந்தி நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நான் 1 லட்சம் தருகிறேன் என்று சொன்னார். அவர் 1 லட்சம் என்ன, 10 லட்சம்கூட கொடுத்து வாங்கிக் கொள்வார்.

cm stalin
செப். 8-ல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்றைக்கு வருகை தந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞர் அவர்களுடைய நினைவிடத்தை போய் பார்க்கவேண்டும் என்று நாங்கள் கூட கேட்கவில்லை, பார்த்தே தீரவேண்டும் என்று அவரே கேட்டு, முழுமையாக அத்தனையும் பார்த்துவிட்டு இதுமாதிரி எங்கேயும் பார்த்ததில்லை என்று பாராட்டிவிட்டுச் சென்றார். அதற்கு பிறகு நிகழ்ச்சிக்கு வந்தார்.

வந்தவுடனே ஒரு பெரிய அதிர்ச்சியை எங்களுக்கெல்லாம் கொடுத்தார். இந்த அரங்கத்தில் இருக்கக்கூடிய அத்தனை பேரும் எழுந்து நின்று கலைஞருக்கு மரியாதை செலுத்துங்கள் என்று சொன்ன அந்த காட்சியை இன்றைக்கும் என்னால் மறக்கமுடியவில்லை. நேற்று இரவு முழுவதும், மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com