இஸ்ரேல் பிணைக் கைதிகள் சடலங்களாக மீட்பு - காஸாவில் போர் நிறுத்தம் அவசியம்!

காஸாவில் பள்ளி மீது தாக்குதல்: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!
இஸ்ரேலில் பிணைக் கைதிகளை மீட்கக்கோரி குடும்பத்தினர் போராட்டம்
இஸ்ரேலில் பிணைக் கைதிகளை மீட்கக்கோரி குடும்பத்தினர் போராட்டம்படம் | ஏபி
Published on
Updated on
2 min read

காஸாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் படைக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூண்ட போர், 10 மாதங்களைக் கடந்தும் தொடருகிறது.

காஸாவில் நடைபெறும் போர் மத்திய கிழக்குப் பகுதிகளின் பிற பகுதிகளுக்கும் விரிவடையும் பேராபத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் - ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தத்தை மேற்கொள்ளும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, மேற்காசிய நாடுகளில் பிளிங்கன் 9-ஆவது முறையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். திங்கள்கிழமை(ஆக. 19) இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில், அந்நாட்டின் அதிபர் ஐசாக் ஹர்ஸோக் உடன் அவர் பேச்சுவர்த்தையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், காஸா போா் நிறுத்தத்துக்கு அமெரிக்கா கொண்டு வந்த முன்மொழிவு திட்டத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதேபோல் ஹமாஸ் அமைப்பினரும் போா் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புக் கொள்ள அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேலில் பிணைக் கைதிகளை மீட்கக்கோரி குடும்பத்தினர் போராட்டம்
காஸாவில் போர்நிறுத்தம்! இதுவே கடைசி வாய்ப்பு -இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

போர் நிறுத்தம் குறித்த உடன்படிக்கைக்கு இருதரப்பும் சம்மதம் தெரிவிக்கும் என்ற எதிர்பார்பு நிலவிய நிலையில், காஸாவில் பள்ளி மீது இஸ்ரெல் படைகள் தாக்குதல் நிகழ்த்தியிருப்பது போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு தடங்கலை ஏற்படுத்தியுள்ளது.

காஸா நகரில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தை குறிவைத்து, இஸ்ரேல் பாதுகாப்புப்படையின் விமானம் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இந்த தாக்குதலில் இரு குழந்தைகளும் 5 ஆண்களும் கொல்லப்பட்டிருப்பதாக காஸா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸாவில் நிலவும் சண்டையில் வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பள்ளிக் கட்டடத்தில் தஞ்சமடைந்திருந்த நிலையில், அவர்கள் மீது இந்த கொடூர தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

படம் | ஏபி

இதனிடையே, இஸ்ரேலிலிருந்து பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. தெற்கு காஸாவின் கான் யூனிஸ் பகுதியிலிருந்து பிணைக் கைதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் பிணைக் கைதிகளை மீட்கக்கோரி குடும்பத்தினர் போராட்டம்
போா் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்: நெதன்யாகுவுடனான பேச்சுக்கு பிறகு பிளிங்கன் அறிவிப்பு

இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் சிறைபிடித்துச் சென்றுள்ள மேலும் பலர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களை பத்திரமாக மீட்க வேண்டிய நெருக்கடிக்கு பெஞ்சமின் நெதன்யாகு அரசு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரும் போா் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்தால் காஸாவில் விரைவில் அமைதி திரும்புவதுடன், இஸ்ரேல் பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com