கூடலூர் அருகே சாலையில் உலாவிய புலி: வாகன ஓட்டிகள் அச்சம்

தமிழக - கேரள எல்லையோர கிராமமான பாட்டவயலில் இருந்து வெள்ளேரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் புலி ஒன்று வந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
கூடலூர் அடுத்துள்ள தமிழக - கேரளா எல்லையோர கிராமமான பாட்டவயலில் இருந்து வெள்ளேரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் சாலையை கடந்து காட்டுக்குள் செல்வற்காக அங்குமிங்கும் ஓடும் புலி.
கூடலூர் அடுத்துள்ள தமிழக - கேரளா எல்லையோர கிராமமான பாட்டவயலில் இருந்து வெள்ளேரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் சாலையை கடந்து காட்டுக்குள் செல்வற்காக அங்குமிங்கும் ஓடும் புலி.
Published on
Updated on
1 min read

கூடலூர் : கூடலூர் அடுத்துள்ள தமிழக - கேரள எல்லையோர கிராமமான பாட்டவயலில் இருந்து வெள்ளேரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் புதன்கிழமை காலை குழந்தைகள் செல்லும் நேரத்தில் திடீரென சாலைக்கு புலி ஒன்று இறங்கி வந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

கூடலூர் அடுத்துள்ள தமிழக - கேரள எல்லையோர கிராமமான சாலையில் ஒற்றை புலி நடந்து வரும் விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் புலி, கரடி , சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக குடியிருப்புப் பகுதிகள் அதிகரித்து வருவதால் வனப் பகுதிகள் குறைந்து வரும் சூழலில் வன விலங்குகள் காட்டிலிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன. இதனால், அவ்வப்போது மனித -விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

கூடலூர் அடுத்துள்ள தமிழக - கேரளா எல்லையோர கிராமமான பாட்டவயலில் இருந்து வெள்ளேரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் சாலையை கடந்து காட்டுக்குள் செல்வற்காக அங்குமிங்கும் ஓடும் புலி.
ரூ.63,200 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

இந்த நிலையில், கூடலூர் அடுத்துள்ள தமிழக - கேரளா எல்லையோர கிராமமான பாட்டவயலில் இருந்து வெள்ளேரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் புதன்கிழமை காலை பள்ளிக்கு குழந்தைகள் செல்லும் நேரத்தில் திடீரென சாலைக்கு புலி ஒன்று இறங்கி வந்தது.

சாலையின் குறுக்கே புலி வந்து நிற்பதை பள்ளி வாகனத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள் பயத்தில் கதறி அழுதனர். நல்ல வயது முதிர்ந்த புலி மிடுக்கான தோற்றத்தில் சாலையை கடந்து காட்டுக்குள் செல்வற்காக சாலையில் அங்குமிங்கும் ஓடியது.

அதை பார்த்த வாகன ஒட்டிகளும் பயணிகளும் பதற்றமடைந்தனர். சிறிது நேரத்தில் காட்டுக்குள் புலி இறங்கிச் சென்றதும் நிம்மதியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com