புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாகச் சரிந்துள்ளதால், 39 நாள்களுக்கு பின் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

News image

ஒகேனக்கல் பிரதான அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :23 ஆகஸ்ட் 2024, 6:10 am

DIN

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாகச் சரிந்துள்ளதால், 39 நாள்களுக்கு பின் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக மாநிலங்களில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடுவது குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கன அடியாக நீா்வரத்து சரிந்தது.

இதையடுத்து ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிர்வாகம் திரும்பப் பெற்று, 39 நாள்களுக்கு பின்னர் குளிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் பாதுகாப்பாக குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.