பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஹிஸ்புல்லா பதில் தாக்குதல்: இஸ்ரேலில் அவசர நிலை!

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு 320 ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது.

News image

ஹிஸ்புல்லா தாக்குதல். (கோப்புப்படம்) - DIN

Updated On :25 ஆகஸ்ட் 2024, 5:15 am

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு 320 ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடைபெற்றுவருகிறது.

இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் மற்றோா் ஆயுதக் குழுவினரான ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் நிலைகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், இது தரப்பினருக்கும் இடையே மோதல் தொடர்ந்துவருகிறது.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த நிலையில், 48 மணி நேரத்திற்கு அவசர நிலையை இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட் அவசர நிலையை அறிவித்தார்.

ஹமாஸ் அரசியல் குழுத் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.