பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் மனுவை அதிமுக மருத்துவ அணி மாநிலச் செயலாளர் டாக்டர் சரவணன் அளித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்தோடு தொடர்ச்சியாக அதிமுகவையும், பொதுச் செயலாளரையும் தரக் குறைவாக பேசி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர் குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிச்சாமி மீதும் அவதூறு பரப்பி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறுப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!

எடப்பாடியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார் இபிஎஸ்!

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



