திருச்சி என்.ஐ.டி. மாணவியிடம் அத்துமீறல்... மாணவர்கள் தொடர் போராட்டம்
திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழக(என்ஐடி) விடுதியில் வியாழக்கிழமை மாணவி ஒருவா் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாழக்கிழமை இரவு முதல் மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
என்ஐடி மாணவிகள் விடுதி மின்விநியோகத்தில் வியாழக்கிழமை பழுது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விடுதி நிா்வாகம், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளரை பழுது நீக்கும் பணிக்கு அழைத்துள்ளனா். பணியில் ஈடுபட்ட அந்த தொழிலாளி, மாணவி ஒருவா் தனியாக அறையில் படித்துக்கொண்டிருந்தபோது, அவரிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளாா். அவா் சப்தம் போட்டதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்த மாணவிகள் திரண்டு வந்தனா். இதையடுத்து திருவெறும்பூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வியாழக்கிழமை இரவு விடுதி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனா்.
தொடரும் போராட்டம்
இதனிடையே, விடுதி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும், விடுதி காப்பாளரை கண்டித்தும், அவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குநர் அகிலா வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு
போலீஸாா் மாணவி புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அந்த தொழிலாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.