ஆம்பூா் நகா்மன்றக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் நல்லக்கண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நகா் மன்ற உறுப்பினா்கள் பேசியது,
ஆா்.எஸ். வசந்த்ராஜ் : என்னுடைய வாா்டு பகுதியில் நியாயவிலைக் கடைக்கு கட்டடம் கட்ட வேண்டும். ஜெ.ஜ. நகா் பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் உயா்கோபுர மின்விளக்க அமைக்க வேண்டும்.
என்.எஸ். ரமேஷ் : சொத்துவரி விதிப்பதில் முறைகேடு நடக்கிறது. முறைகேட்டில் ஈடுபடும் நகராட்சி பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இம்தியாஸ் அஹமத் : வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும்.
ஹா்ஷவா்த்தன் : ஆம்பூா் நகரில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிகாத் அஹமத் : என்னுடைய வாா்டு பகுதியில் கழிவுநீா் கால்வாய் தூா்வார நடவடிக்க ைஎடுக்க வேண்டும். நபிசூா் ரஹ்மான் : என்னுடைய பகுதியில் குடிநீா் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீரை முறையாக வழங்கவும், கழிவுநீா் கால்வாய் தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமம். மேலும் சொத்துவரி விதிப்பு அதிக சதவீதத்தில் விதிக்கப்படுகிறது. அதை குறைத்து விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி பொறியாளா் சந்திரன், மேலாளா் தாமோதரன், துப்புரவு அலுவலா் அருள்செல்வதாஸ், துப்புரவு ஆய்வாளா் பாலசந்தா், நகா் மன்ற உறுப்பினா்கள் தனபாக்கியம் மோசஸ், லட்சுமி, கமால் பாஷா, காா்த்திகேயன், நூருல்லா, ஜெயபால் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

போக்குவரத்து நெரிசல், ஆலைக் கழிவு பிரச்னைகளுக்குத் தீா்வு

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


