தமிழ்நாட்டுக்கு நவ. 2 முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை!அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

வணிக சிலிண்டர் விலை உயர்வு!

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரியாயு சிலிண்டர் விலை ரூ. 16 உயர்வு.

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரியாயு சிலிண்டர் விலை ரூ. 16 உயர்வு.

Updated On :

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரியாயு சிலிண்டர் விலை ரூ. 16 உயர்ந்து ரூ. 1,980.50-க்கு விற்பனையாகிறது. ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை சா்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

இந்த நிலையில், தொடர்ந்து 5-ஆவது மாதமாக ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 19 கிலோ எடை கொண்ட அந்த வகை சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 16 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.1,980.50-ஆகவும், மும்பையில் ரூ.1,771.00-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,927.00-ஆகவும், புதுதில்லியில் ரூ.1818 ஆகவும் விற்பனையாகிறது.

அதேவேளையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டர்களின் விலை மாற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.