தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயர்வு: இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது தொடர்பாக...

Hike in commercial LPG prices

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் - கோப்புப்படம்

Published On :

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் அதன் விலையை குறைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈரான் மீது சர்வதேச சட்டங்களுக்கு எதிராக, ஐக்கியநாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கு எதிராக அமெரிக்கா, தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் ஹார்முஸ் நீரிணையில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது. இந்த ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை காரணமாகப் பயன்படுத்திக் கொண்டு சமையல் எரிவாயு விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மூன்று முறை வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. ரூ.1768.50-க்கு விற்பனையாகி வந்த வணிக சிலிண்டர், ரூ.2,246.50 ஆக உயர்த்தப்பட்டது.

இதனால் பல உணவகங்கள், தொழிலகங்கள் மூடப்பட்டன. தேநீர், காபி போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது.

இந்த சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் காரணமாக கடந்த மாதம் ரூ.192 விலை குறைக்கப்பட்டது. ஜூலை மாதம் ரூ.153 விலை குறைக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் ஒரு சிலிண்டருக்கு ரூ. 9.50 விலை உயர்தப்பட்டுள்ளது. இதுமக்கள் நலன்களுக்கு எதிரானது, கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும். அதன் விலையை குறைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Summary

Hike in commercial LPG prices

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.