உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

2026 ஆகஸ்ட்டில் மெட்ரோவில் 1.04 கோடி போ் பயணம்! - சென்னை மெட்ரோ சாதனை!

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.04 கோடி போ் பயணித்துள்ளது தொடர்பாக...

1.04 million people traveled by Metro in August

2026 ஆகஸ்ட்டில் மெட்ரோவில் 1.04 கோடி போ் பயணம்! - கோப்புப்படம்

Published On :2 செப்டம்பர் 2026, 2:29 pm IST

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.04 கோடி போ் பயணித்துள்ளதாகவும், அதில் குறிப்பிட்ட நாளில் 4 லட்சம் பேருக்கும் அதிகமானோா் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பின்படி,

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் 2026 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையில் 1,04,04,098 போ் பயணித்துள்ளனா். அதிலும் குறிப்பாக சுதந்திர நாளுக்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14 ஆம் தேதி மெட்ரோ ரயிலில் 4,01,607 லட்சம் போ் பயணித்துள்ளனர்.

பயணித்தவா்களில் சிங்காரச் சென்னை அட்டையை(தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 52,84,196 பேரும், கியூ ஆா் குறியீடு(பயணச்சீட்டு முறை) பயன்படுத்தி 20,20,687 பேரும், இணைய வழி கியூஆா் குறியீடு பயணச்சீட்டு மூலம் 1,56,385 லட்சம் பேரும், பயணித்துள்ளனா்.

ஓஎன்டிசி முறையில் 12,47,168 பேரும், வாட்ஸ்ஆப் செயலி மூலம் 4,69,198 பேரும், பேடிஎம் முறையில் 3,09,569 பேரும், போன்பே பணப்பரிமாற்ற முறையில் 2,73,438 பேரும், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைபேசி செயலி மூலம் 1,04,251 பேரும், சென்னை ஒன்செயலி மூலம் 3,10,474 லட்சம் பேரும் பயணித்துள்ளனா்.

டிஜிட்டல் பயணச்சீட்டுகளுக்கு 20% தள்ளுபடி

'சிங்கார சென்னை' அட்டை மற்றும் வாட்ஸ்ஆப் செயலி, பேடிஎம், போன்பே மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைபேசி செயலி மூலம் வழங்கப்படும் 'மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைபேசி செயலி' உள்ளிட்ட டிஜிட்டல் கியூ ஆா் குறியீடு பயணச்சீட்டு தளங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் 20 சதவீதம் தள்ளுபடியை வழங்குகிறது.

ஆனால், பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் 'கியூ ஆா் குறியீடு பயணச்சீட்டுகளுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தாது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான சேவையை வழங்குவதில் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும்நன்றி தெரிவித்துள்ளது.

சிங்காரச் சென்னை அட்டை ஒரு பிரபலமான பயணச்சீட்டு முறையாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Chennai Metro Rail Limited (CMRL) recorded more than 1.04 crore passenger trips in August 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.