ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டம்: தொடக்கிவைத்த முதல்வர்!

79 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்.
ரூ.1,383  கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டம்: தொடக்கிவைத்த முதல்வர்!
Published on
Updated on
3 min read

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,383  கோடி மதிப்பீட்டிலான 79 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக மருத்துவ உபகரணங்கள் வழங்கி,
29 முடிவுற்றப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று (4.12.2024) சென்னை, வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 1,383 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 79 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக மருத்துவ உபகரணங்கள் வழங்கி,
29 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார். 

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 79 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வால்டாக்ஸ் சாலையில் 129.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 புதிய குடியிருப்புகள் கட்டுதல், ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் 143.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 776 புதிய குடியிருப்புகள் கட்டுதல், கொன்னூர், திருவொற்றியூர், பெரம்பூர் சென்ட்ரல் நிழற்சாலை, கொண்டித்தோப்பு, திரு.வி.க. நகர் - சந்திரயோகி சமாதி சாலை, புழல்-விளாங்காடுபாக்கம் ஆகிய இடங்களில் 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய  சமுதாயக்கூடங்கள் கட்டுதல்,  21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தண்டையார்பேட்டையில் விளையாட்டு அரங்கம், வில்லிவாக்கம்-அகத்தியர் நகர் மற்றும் ராயபுரம் - மூலகொத்தளத்தில் விளையாட்டு திடல்கள் அமைத்தல், கொளத்தூர் - ஜவஹர் நகர் மற்றும் பெரியார் நகர் நூலகங்களை 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்துதல், கொளத்தூரில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் சேவை மையம் கட்டுதல், கொளத்தூர் - நேர்மை நகரில் 36.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டுதல், என 421 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 15 புதிய திட்டப்பணிகள்;

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மாதவரம் பேருந்து முனையம் மற்றும் விநாயகபுரம் பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல், எண்ணூர், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, பேசின் பாலம், பெரம்பூர், புரசைவாக்கம், அயனாவரம் ஆகிய இடங்களிலுள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டுதல், மாத்தூர், கொடுங்கையூர், இராயபுரம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை – சோலையப்பன் தெரு, பெரியதம்பி தெரு மற்றும் வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் – கத்படா பிரதான சாலை மற்றும் சண்முகம் தெரு, செனாய் நகர் ஆகிய இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள், வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய இடங்களில் விளையாட்டு மைதானங்கள், வில்லிவாக்கத்தில் மறுவாழ்வு மையம் அமைத்தல், கொடுங்கையூரில் சமுதாயக்கூடம், சேத்பட்டு  சுற்றுச்சூழல் பூங்காவை மேம்படுத்துதல், கத்திவாக்கம் மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம், இராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள், காசிமேடு, கொளத்தூர், பல்லவன் சாலை ஆகிய இடங்களில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகள்,  குளங்களை சீரமைக்கும் பணிகள், மண்டலம் 1 முதல் 8 வரையில் உள்ள மின்மாற்றிகளை சுற்றி அழகுபடுத்தும் வகையிலும், பாதுகாப்பு நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ள பார்வை மறைப்பான்கள், பெரம்பூரில் இறைச்சிக்கூடம் அமைக்கும் பணி, கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனையை மேம்படுத்துதல், என 204 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 45 புதிய திட்டப்பணிகள்;

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் குடிநீர் குழாய்களை சீரமைத்தல் மற்றும் கழிவு நீர் உந்து நிலையங்களின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், என 440 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 13 திட்டப் பணிகள்;

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்கிட டேவிட்சன் தெருவில் 33/11 கிலோ வாட் துணை மின்நிலையம் அமைத்தல் மற்றும்  310 ஆர்.எம்.யு மின் உபகரணங்கள் நிறுவுதல், என 70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2  திட்டப்பணிகள்;

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் துறைமுகத்தில் 269 புதிய குடியிருப்புகள் கட்டுதல், புளியந்தோப்பில் 612 புதிய குடியிருப்புகள் கட்டுதல் மற்றும் எல்லீஸ்புரத்தில் 65 புதிய குடியிருப்புகள் கட்டுதல், என 134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய திட்டப்பணிகள்;  

என மொத்தம் 1,268 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 79 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

கொளத்தூர், பெரியார் நகர் மருத்துவமனைக்கு  மருத்துவ  உபகரணங்களை வழங்குதல்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பெரியார் நகர் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு, இருதய சிகிச்சைப் பிரிவு, சிறுநீரக சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் சிகிச்சைப் பிரிவு, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, வயிறு மற்றும் குடல் சிகிச்சைப் பிரிவு, பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற சிறப்பு பிரிவுகள் துவங்கப்பட்டு உயர் சிறப்பு மருத்துவமனையாக அமைக்கப்பட்டுள்ள அம்மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக 77 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 29 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலங்களில் கட்டப்பட்டுள்ள 8 அங்கன்வாடி மையங்கள், மணலி மண்டலத்தில் பல்நோக்கு மையம், மணலி மண்டலம் – சின்னமாத்தூர் சாலை, தேவராஜன் சாலை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடங்கள், மணலி, தண்டையார்பேட்டை, மாதவரம், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கட்டப்பட்டுள்ள பள்ளி  வகுப்பறைக் கூடுதல் கட்டடங்கள், மணலி, மாதவரம் மற்றும் இராயபுரம் ஆகிய மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு திடல்கள், மாதவரம் மண்டலம் – அம்பத்தூர் ரெட் ஹில்ஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மியாவாக்கி பூங்கா; என மொத்தம் 38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 29 முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com