
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதானி விவகாரம், உ.பி.யில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம் தொடர்பாக டவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற மக்களவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம்!
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் நவ. 25 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தொழிலதிபா் கெளதம் அதானி மீதான அமெரிக்க நீதித் துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது ஏற்பட்ட வன்முறை ஆகிய விவகாரங்களை முதல் நாளில் இருந்தே எதிா்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இவ்விரு விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதம் கோரி, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.