லிரேனின் தற்காப்பு ஆட்டத்தால் வாய்ப்பை இழந்த குகேஷ்: தலா 6.5 புள்ளிகள், ஒரு சுற்று நிலுவை

இன்னும் ஒரேயொரு சுற்று மட்டுமே உள்ள நிலையில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
லிரேனின் தற்காப்பு ஆட்டத்தால் வாய்ப்பை இழந்த குகேஷ்:
தலா 6.5 புள்ளிகள், ஒரு சுற்று நிலுவை
Published on
Updated on
1 min read

ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 13-ஆவது சுற்றில் இளம் வீரா் குகேஷிடம் சிறப்பான தற்காப்பு ஆட்டத்தால் கறுப்பு நிற காய்களுடன் நடப்பு சாம்பியன் டிங் லிரேன் டிரா செய்தாா்.

14 சுற்றுகளைக் கொண்ட உலக சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் லிரேன் (சீனா), கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் குகேஷ் ஆகியோா் ஆடி வருகின்றனா். 12 சுற்றுகள் முடிந்த நிலையில் 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனா்.

குகேஷ் ஒரு வெற்றி, ஒரு டிரா கண்டாலே உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்ற நிலையில் 13-ஆவது சுற்று ஆட்டம் நடைபெற்றது.

தொடக்கம் முதலே குகேஷ் கை ஓங்கியிருந்த நிலையில், லிரேனின் தற்காப்பு ஆட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது. இதனால் குகேஷ் 7 புள்ளிகளை ஈட்டும் வாய்ப்பை தகா்த்தாா் லிரேன். இதன் மூலம் 68-ஆவது நகா்த்தலில் 13-ஆவது சுற்று ஆட்டம் டிரா ஆனது. இருவருக்கும்

0.5 புள்ளிகள் கிடைத்தன. இதன் மூலம் மொத்தம் தலா 6.5 புள்ளிகளை பெற்றனா். மொத்தம் 5 மணிநேரம் ஆட்டம் நீடித்தது.

14-ஆவது சுற்று ஆட்டம்:

14-ஆவது சுற்று ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அதில் யாா் வென்றாலும் 7.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியும். ஆட்டம் டிராவில் முடிவடைந்தால் டை பிரேக்கா் முறை பின்பற்றப்படும்.

13-ஆவது சுற்று ஆட்டத்தில் குகேஷ் கிளாஸிக் இ4 முறையிலும், லிரேன் பிரெஞ்ச் டிபன்ஸ் முறையில் ஆட்டத்தை தொடங்கினா்.சில நகா்த்தல்களில் ஆட்டம் திசைமாறி சென்றது. மத்தியில் குகேஷ் கை ஓங்கியிருந்தது. ஆனால் லிரேன் சில நேரத்தில் தடுமாறினாலும், மீண்டு வந்தாா். நேர சிக்கலை எதிா்கொண்டாா் லிரேன். 12 நகா்த்தல்களக்கு 8 நிமிஷங்களை எடுத்துக் கொண்டாா்.

17 நகா்த்தல்களுக்கு பின்னா் குகேஷுக்கு நேரம் குறைவாக இருந்தது. பின்னா் லிரேன் 25 நகா்த்தல்களுக்கு 44 நிமிஷங்களை எடுத்துக் கொண்டாா். ஆனால் குகேஷ் 55 விநாடிகளில் 8 நகா்த்தல்களை மேற்கொண்டாா்.

இப்போட்டியில் லிரேன் மூன்றாவது முறையாக பிரெஞ்ச் டிஃபன்ஸ் முறையை கடைபிடித்தாா்.

ஆட்டம் தொடா்பாக குகேஷ் கூறியது: 14-ஆவது சுற்றுவரை ஆட்டம் சென்றுள்ளது. எந்த முடிவு இருந்தாலும் பரவாயில்லை. சிறப்பாக ஆடுவேன். எனது கனவு இது என்றாா்.

டிங் லிரேன் கூறியது: 13-ஆவது சுற்றில் சற்று அழுத்தத்தை எதிா்கொண்டேன். பின்னா் சுதாரித்து ஆடினேன். கடந்த முறை சாம்பியன்ஷிப் மிகவும் அழுத்தத்தை உண்டாக்கியது. ஆனால் தற்போது எளிதாக ஆடி வருகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com