பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

பக்தர்கள் மலையேற அனுமதி மறுப்பு ஏன்? - திருவண்ணாமலை ஆட்சியர்

தீபம் ஏற்றும்போது பக்தர்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக...

News image
திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்படும் காட்சி (கோப்புப்படம்)
Updated On :11 டிசம்பர் 2024, 2:07 pm

DIN

மகா தீபம் ஏற்றும்போது பக்தர்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி:

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின்போது ஏற்றப்படும் மகா தீபத்திற்கு வழக்கமாக 2,500 பேர் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் பென்ஜால் புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் 7 பேர் பலியானார்கள்.

இதனால், தீபத்திருவிழாவன்று பக்தர்கள் மலையேறுவதால் ஏற்படும் அபாயங்களை ஆய்வு செய்வதற்காகவும், மலையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காகவும் தொல்லியல் மற்றும் சுரங்கத்துறையினர் கொண்ட குழு ஆய்வு செய்தது.

அவர்கள் அளித்த அறிக்கையில், மலையின் மேற்பகுதியில் ஈரப்பதம் இருப்பதாகவும், பாறைகள் உருளும் அபாயம் இருப்பதாகவும், மண்சரிவு ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும், இதனால் பக்தர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலும் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ எனவும், பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.